சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் குறித்த வளாகத்தில் பாதுகாப்பில் இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு மேலதிகமாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை விசேட படையின் வீரர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று(05) இரவு முதல் இவ்வாறு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பிணை முறி ஆணைக்குழுவில் முக்கியமான ஆவணங்கள் இருப்பதால் இவ்வாறு பாதுகாப்பை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(rizmira)..