இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர், பமுனுகம ஹோட்டலின் நீச்சல் தடாகத்தில் நீச்சலில் ஈடுபட்ட போது மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் இடம்பெறும் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த 12 வயதான வீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று(05) மாலை குறித்த இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் இன்று(06) பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.
இலங்கையில் கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்காக 19 இந்திய இளம் வீரர்கள் இங்கு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)