ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் இன் 100-வது படமாக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `மெர்சல்’.
இப் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், `மெர்சல்’ படக்குழு விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக வழங்கி வருகிறது.
சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதேவேளை ஆளப்போறான் தமிழன்’, `நீதானே’, `மெர்சல் அரசன்’ உள்ளிட்ட பாடல்களின், பாடல் வரிகள் அடங்கிய வீடியோ ஏற்கனவே வெளியாகியிருந்தது.
இந்நிலையில், `மாச்சோ’ பாடலின் வரிகள் அடங்கிய வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. இது விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.
அத்துடன் `மெர்சல்’ படத்தில் இருந்து டீசர் அல்லது டிரைலர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.