பாராளுமன்ற அமைச்சர்களுக்கான உணவு வேளைகளின் விலை இன்று முதல் அதிகரிப்பு.. (விலைப் பட்டியல்)

பாராளுமன்ற அமைச்சர்களுக்கு பாராளுமன்றினால் வழங்கப்படும் உணவுகளின் விலையானது  இன்று(06) முதல் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பாராளுமன்ற அமைச்சர்களுக்கு பாராளுமன்றினால் வழங்கப்படும் உணவுகளின் விலையானது  இன்று(06) முதல் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 150 ரூபாவிற்கு விற்கப்படும் ஒரு உணவு வேளை 200 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவது 08 வருடங்களுக்கு பிறகு என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற அமைச்சர்கள் தவிர்ந்த பாராளுமன்ற அலுவலக குழுவினர், அமைச்சர்களது காவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள்  ஆகியோருக்கான ஒரு வேளை உணவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானமானது சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் பாராளுமன்றில் கூடிய செயற்குழுவின் போது எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அமைச்சர் ஒருவருக்கான உணவு வேளைப் பட்டியல் விவரம்.

(rizmira)