STF அதிகாரிகள் 177 பேருக்கு பதவி உயர்வு..

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து சேவையில் ஈடுபடும்
தகுதியுள்ள 177 அதிகாரிகளுக்குக் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 93 சார்ஜன்ட்கள் பிரதி பொலிஸ் பரிசோதகர்களாகவும், 84 பிரதி பொலிஸ் பரிசோதகர்கள் பொலிஸ் பரிசோதகர்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

குறித்த பதவி உயர்வுகள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மூலம் வழங்கப்பட்டுள்ளது.

 

(rizmira)