பிணை முறி விநியோக சர்ச்சையில் ரோசியின் புதல்வருக்கு சிக்கல்..

மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட முதலாவது கோப் குழுவின் சாட்சிகளின் பிரதிகள், அதன் உறுப்பினரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்கவின் புதல்வர் கனிஷ்க சேனாநாயக்கவினால் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்துக்கு முன்கூட்டியே கசித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தொலை பேசி ஊடாக குறித்த இந்த தகவல் அர்ஜூன் அலோசியசுக்கு கிடைத்தது கண்டறியப்பட்டுள்ளது.

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பிரதான முகவரான நுவான் சல்காது இன்று முற்பகல் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க ஆரம்பித்தார்.

இதன்போது, அவருக்கும் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் மேலாளர் கசுன் பலிசேனவுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் ஒலிப்பதிவு ஆணைக்குழுவின் முன் ஒலிபரப்பப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி இருவருக்கும் இடையில் குறித்த இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளமை ஆணைக்குழுவினால் கண்டறியப்பட்டுள்ளது.

 

(rizmira)