ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட கூட்டம் ஒன்று ஜனாதிபதி தலைமையில் இன்று(06) இரவு 8மணியளவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் மத்திய சபை உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கத்தை பிரதிநித்துவப்படுத்தும் சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் குறித்த கலந்துரையாடலில் பங்கு கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் 66வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்ளாதவர்கள் தொடர்பில் எடுக்கும் தீர்மானம் தொடர்பாகவும் 20வது சட்டமூல திருத்தம் தொடர்பாகவும் குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்படவிருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
(rizmira)