காணாமல் போனோர் குறித்த தகவல்களை வெளிப்படுத்தக் கோரி கிளிநொச்சியில் கந்தசுவாமி ஆலய முன்றலில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் இன்று(07) 200வது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது.
இதேவேளை, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை போன்ற மாவட்டங்களிலும் காணாமல் போனோரின் உறவினர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி உறவினர்களால் கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.