வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பாகங்களிலும் கடுமையான மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் இலங்கையின் கடற்பிராந்தியங்களில் 60 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் எனவும் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரி அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குறைந்தளவான தாழமுக்கம் காரணமாக நாட்டில் தொடர்ச்சியாக கடுமையான மழைவீழ்ச்சி பதிவாகி வருகின்றது. அத்துடன் இரவு வேளைகளில் அதிகளவாக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடிய நிலையிருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு முதல் புத்தளம் வரையான கடற்பிராந்தியங்களில் மணிக்கு சுமார் 60 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் கடும் காற்றுவீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரி அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.