ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் காலம் 2 மாதம் நீடிப்பு..

பாரிய ஊழல் மோசடிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரக் காலம் மேலும் இரண்டு மாதங்கள் நீடிக்கப்பட்டுள்ளது.

இவ் ஆணைக்குழுவின் பணிக்காலம் கடந்த மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் அதனை ஆறு மாதங்களுக்கு மேலும் நீடிக்குமாறு கோரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இரண்டு மாதங்களுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.