அமெரிக்காவின் கரீபியன் பகுதிகளில் பதம் பார்த்துள்ள இர்மா புயலினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் புதிதாக உருவான சக்திவாய்ந்த இர்மா புயல் கரீபியன் நாடுகளை பதம் பார்க்கத் தொடங்கி உள்ளது.
இப்புயல் காரணமாக செயின்ட் மார்ட்டின், செயின்ட் பார்தலெமி ஆகிய தீவுகளில் பலத்த காற்றுடன் கடும் மழை பெய்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த புயலின் வேகம் மணிக்கு சுமார் 295 கீ.மி. வரை அதிகரிக்கலாம் என கூறப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.