பிணை முறி குறித்த குற்றச்சாட்டு பொய்யானது என ரோஸி அறிக்கை! அவமதிப்புக்கு வழக்கு..

கோப் குழுவின் உறுப்பினராக இருந்த காலத்தில் தான் குறித்த குழுவினால் முன்வைக்கப்பட்ட எந்தவொரு தகவல்களையும் சட்டவிரோதமாக எந்தத் தரப்பினருக்கும் வழங்கவில்லை என பிரதம அலுவலக துணைப் பிரதானியான ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

பிணை முறி விநியோகம் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியிருந்த நபரொருவர் தனது மகனின் பெயரில் வாக்குமூலம் ஒன்றினை பதிவு செய்திருந்தார். என்றாலும் அவர் எவ்வித ஆதாரங்களையும் ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்திருக்கவில்லை. ஆணைக்குழு முன்னிலையில் அவர் கடந்த 2016ம் ஆண்டு இடம்பெற்ற உரையாடலினை மட்டுமே சமர்ப்பித்திருந்தார். தான் குறிப்பிட்ட ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினர் இல்லை எனவும் ரோஸி சேனாநாயக்க குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆதலால், தனக்கும் தனது மகனுக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுப்பதாகவும், தனது பெயருக்கு களங்கம் விளைவித்த அனைத்து தரப்பினருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் ரோஸி சேனாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)