மாகாண சபைகளுக்கான தேர்தல் கலப்பு முறையில் நடத்துவதற்கு வழிவகுக்கும் அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேசிய அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று(07) இடம்பெற்றது.
இதன்போது மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இதற்கான யோசனையை அமைச்சரவையில் ஒப்புதலைப் பெறுவதற்காக சமர்ப்பித்திருந்த நிலையில், அதற்காக மாகாண சபைகளுக்கு 60% தொகுதிவாரியாகவும், 40% விகிதாசார முறையிலும் தெரிவு செய்யப்படும் எனத் தெரிய வருகின்றது.
இதேவேளை, புதிய முறைமைக்கான எல்லை மீள்நிர்ணய பணிகள் பூர்த்தியடைந்த பின்னரே மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதென அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எல்லை மீள் நிர்ணயங்களை மேற்கொள்வதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் சகல அரசியல் கட்சிகளினதும் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
(rizmira)