கடந்த நான்கு நாட்களாக குற்றப்புலனாய்வு பிரிவில் சாட்சியமளித்திருந்த பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன தலைவர் அர்ஜுன் அலோஸியஸ் இன்று(11) முதல் பிணை முறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கவுள்ளார்.
பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலும் தன்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை தெளிவுபடுத்தும் நோக்கிலும் விசேட அறிக்கை ஒன்றினை வழங்க கடந்த நான்கு நாட்களாக குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னிலையில் ஆஜராகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், அலோசியஸ் இன்று(11) பிணை முறி குறித்து சாட்சியம் வழங்கும் போது ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பனவும் அவர் சார்பில் முன்னிலையாவார் என தெரிவிக்கப்படுகின்றது.
(rizmira)