உணவு உற்பத்திக்கான தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஒக்டோபரில்…

மகாவலி விவசாய சமூகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து விவசாய சமூகத்தினதும் பங்களிப்புடன் நாட்டுக்கு தேவையான உணவை உற்பத்திசெய்வதற்காக அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ள உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

மகாவலி விவசாய சமூகத்தினரின் பிள்ளைகளின் விளையாட்டு திறமைகளை வெளிக்கொணரும் வருடாந்த மகாவலி விளையாட்டு விழா நேற்று(10) பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.