சைட்டம் சர்ச்சையால் நாட்டில் மீளவும் பீதி நிலவும் சாத்தியம்..

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான பிரச்சினைக்கு குறித்த காலத்தினுள் தீர்வு எட்டப்படாதவிடத்து நாட்டில் மீளவும் பீதி நிலவும் சாத்தியம் அதிகளவு உண்டு என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

மேலும், குறித்த சர்ச்சைக்குரிய சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு புறக்கோட்டை பகுதியில் வைத்திய மாணவர்கள் தொடர்ந்தும் 21ம் நாளாகவும் போராட்டம் நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)