தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான DD ரசிகர்களின் மனங்களை அதிகம் கவர்ந்தவர்களில் ஒருவர் என்பது யாவரும் அறிந்ததே..
Coffee with DD இப்போது அன்புடன் DDயாக மாறிவிட்டார். சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும், சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்கிறார்.
தனக்கு பேச்சு திறமை எப்படி வந்தது என்பதை ஒரு முறை நிகழ்ச்சியில் கூறியதை யாரும் மறக்க முடியாது. டிவி நிகழ்ச்சிகளை அதிகம் விரும்பும் இவர், தனக்கு தேடி வந்த சினிமா பட வாய்ப்புகளை தவிர்த்து வந்தாராம்.
நண்பர் தனுஷின் கட்டாயத்தால் பா. பாண்டி படத்தில் நடித்தாராம். இதன் பிறகு சினிமா மோகம் வந்து விட்டதால் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் DD நடிக்கவிருக்கிறார்.
படம் முழுக்க ஒரு பெரிய கேரக்டர் ரோல் என்பதால் சில நாட்களுக்கு டிவி நிகழ்ச்சிகளுக்கு பிரேக் கொடுத்துள்ளாராம் நம்ம DD….
(riz_mira)