ரூ.25,000 தண்டப்பணம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் விரைவில்..

போக்குவரத்து ஓழுங்கு மீறல்கள் குறித்த சீர்திருத்தச் சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இம்மாதத்துக்குள் வெளியிடப்படுவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பெருந்தெருக்கள் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது.

வாகன சாரதிகளின் 5 வகையான போக்குவரத்து குற்றங்களுக்கு 25,000 ரூபா தண்டப்பணம் அறவிடல் மற்றும் தண்டப்பண தொகையினை உயர்த்துதல் உள்ளிட்ட சட்டங்களை இம்மாத இறுதிக்குள் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக வீதி பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோத்தாகொட தெரிவித்துள்ளார்.

இது குறித்த சட்டம் வர்த்தமானி அறிவித்தல் வெளியானது முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)