வேலைக்கு செல்லும் பெற்றோர் குழந்தைகளை குழந்தை பராமரிப்பு நிலையத்தில் (Day care)விடும் போது பல விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
1. உங்கள் பிள்ளையை day care சேர்க்கும்போது, குழந்தை அதிகம் விரும்பும் மற்றும் பிடிக்காத விஷயங்களை, அங்கிருக்கும் காப்பாளரிடம் பகிர்ந்து கொள்வது நல்லது. இதன் மூலமாக உங்கள் குழந்தைகளுக்கு ஒவ்வாத உணவு வகைகள் மற்றும் இதர விஷயங்களை வற்புறுத்திக் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள முடியும். மேலும், டே கேர் குழந்தையை பயமுறுத்தாமல் பாதுகாப்புக்கான இடம் என்கிற எண்ணமும் அந்தக் குழந்தைக்கு வருவதற்கு இது உதவும்.
2. எந்த நேரத்தில் குழந்தையை டே கேரில் விடமுடியும், எந்த நேரத்தில் அழைத்து வர முடியும் என்பதை சரியாக முடிவெடுத்தப் பின்னர், அதற்கு ஏற்ற டே கேரில் சேர்ப்பது நல்லது. இதன் மூலம் குழந்தையை காக்க வைக்காமல் அழைத்துச் செல்லவும், இதர பிரச்சினைகளில் இருந்தும் தவிர்க்கலாம்.
3. பிள்ளைகளுக்கு, பொதுவாக வீட்டில் கொடுக்கப்படும் உணவு வகைகளையே டே கேருக்கு கொடுத்தனுப்புங்கள். குழந்தை பழகட்டும் என்பதற்காக புதிய வகை உணவுகளைக் கொடுத்து, அதனால் குழந்தைக்கு அலர்ஜி போன்ற ஏதேனும் உபாதைகள் வந்தால் அதற்கு டே கேர் காரணமா? அல்லது கொடுத்தனுப்பிய உணவா? என்று கலங்கி, குழப்பமடைவதைத் தவிர்க்கலாம்.
5. டே கேரில் சேர்க்கும் முன்னர் குழந்தை உறங்கும் அறை முதல் கழிவறை வரை அனைத்து இடங்களின் சுகாதராம் குறித்து கேட்டறிந்தும், நேரில் ஆய்வு செய்தும் தெரிந்துகொள்வது, உங்கள் குழந்தையின் உடல் நலத்தைக் காக்க உதவும். மேலும், உடல் நலக் கோளாறுகளில் இருந்தும் தவிர்க்க முடியும்.
6. டே கேரில் குழந்தைகளை விடும்போது அவர்கள் தூங்குவதற்கான போர்வை முதல் பால் போத்தல் வரை நீங்களே கொடுத்து தினமும் வாங்கி துவைத்து, கழுவி கொடுத்து அனுப்புவது நல்லது.
7. குழந்தைகளை அழைத்து வருபவர் மற்றும் விசிட்டரின் பெயரை, காப்பக பதிவில் பதிவிட வைப்பது அவசியம் இது குழந்தையின் பாதுகாப்புக்குப் பெரிதும் உதவும்’.