சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராகிறார் ஹலிமா யாக்கோப்..

சிங்கப்பூர் நாட்டின் அதிபர் தேர்தலுக்கான இரு வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் பெண் வேட்பாளரான ஹலிமா யாக்கோப் போட்டியின்றி தேர்வாக உள்ளார்.

இம்முறை நடைபெறும் தேர்தலில் அந்நாட்டின் சிறுபான்மையினரான மலாய் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டியிடலாம் என்ற விதிமுறை உள்ள நிலையில் நாட்டின் எட்டாவது அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறும் இந்த தேர்தலில் போட்டியிடப் போவதாக பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஹலிமா யாக்கோப் என்ற பெண்மணி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல தொழிலபதிபர் முஹம்மது சாலே மரிக்கான் மற்றும் பரித் கான் கைம் கான் ஆகியோரும் இந்த தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த தேர்தல் தொடர்பான வேட்பு மனுக்கள் நேற்று பரிசீலிக்கப்பட்டதையடுத்து, முஹம்மது சாலே மரிக்கான் மற்றும் பரித் கான் கைம் கான் ஆகிய இருவரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.

எனவே போட்டியாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்டதால் ஹலிமா யாக்கோப் மட்டுமே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். சிங்கப்பூர் அரசியல் வரலாற்றில் முதல் பெண் அதிபராக ஹலிமா யாக்கோப் முடிசூட உள்ளமை குறிப்பிடத்தக்கது.