அண்மையில் அணு ஆயுத சோதனையை மேற்கொண்ட வட கொரியா மீது புதிய தடைகள் விதிக்கும் ஐ.நா. வாக்கெடுப்புக்கு ஆதரவாக சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் வாக்களித்துள்ளன
அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட வரைவில் கூறப்பட்ட தீர்மானங்களின்படி நிலக்கரி, ஈயம் மற்றும் கடல் உணவு ஆகியற்றை வட கொரியாவுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த வாரத்தில் அமெரிக்கா முன்மொழிந்த சில கடுமையான தீர்மானங்களை அந்நாடு அகற்றிய பின்னர், குறித்த புதிய தடைகளை ஐ.நா. கவுன்சிலில் நிறைவேற்ற ஒப்புக்கொள்ளப்பட்டது.
அமெரிக்கா முன்மொழிந்த கடுமையான தீர்மானங்களில் பெட்ரோலியம் உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை விதிப்பது மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னின் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகள் ஆகியவை உள்ளடங்கியமை குறிப்பிடத்தக்கது.