நாய்கள் மற்றும் பூனைகளை கொலை செய்வதை தடுக்க கோரிய மனு விசாரணைக்கு திகதி குறிப்பு..

நாய்கள் மற்றும் பூனைகளை கொடூரமாக கொலை செய்வதை தடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை எதிர்வரும் 13ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று(12) தீர்மானித்துள்ளது.

குறித்த இந்த மனு மூவரடங்கிய நீதிபதி குழு முன்னிலையில் இன்று(12) ஆராயப்பட்ட நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மனு கொழும்பு 06 , தர்ம சாஷ்த்ரி விகாரையின் ஆனந்த தேரர் உள்ளிட்ட 25 தேரர்கள் மற்றும் விலங்கு பாதுகாப்பு அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

(rizmira)