இங்கிலாந்து மருத்துவ சபையினால் மாலபே, சைட்டம் மருத்துவ கல்லூரியினை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சைட்டம் நிறுவன பட்டதாரிப் பட்டமானது ஏற்றுக் கொள்ள முடியாத பட்டமாக இங்கிலாந்து மருத்துவ சபை நிராகரித்துள்ளதுடன், உலகிலுள்ள நிராகரிக்கப்பட்ட நிறுவனங்களது பட்டியலினையும் குறித்த சபை இணையத்தில் வெளியிட்டுள்ளது.
அதன்படி, இங்கிலாந்து வைத்திய சபையின் PLAB பரிசோதனைக்கு முகங்கொடுக்கவோ அந்நாட்டு வைத்திய சபையில் பதிவு செய்யவோ குறித்த நிராகரிக்கப்பட்ட நிறுவன பட்டதாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
(rizmira)