மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சைட்டம் எதிர்ப்பு வாகனப் பேரணி, இன்று(15) கொழும்பை வந்தடையவுள்ளது.
இப்பேரணி கடந்த 12ஆம் திகதியில் இருந்து 25 மாவட்டங்களிலும் வாகன பேரணியாக ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.
இவற்றிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், இன்று(15) புத்தளம், கம்பஹா, கேகாலை, கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் சுழற்சி முறையில் பணிப்புறக்கணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.