கடமைக்குத் திரும்பாத ஊழியர்கள் பணியிலிருந்து விலகியதாக கருதப்படுவர் என அறிவிப்பு

மின்சார ஊழியர் சங்கம் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று(14) பிற்பகல் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையினால் குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் மின்சார சேவை வழங்கும் ஊழியர்கள் இன்று(15) காலை 8.30 மணிக்கு முன்னர் கடமைக்குத் திரும்பாத ஊழியர்கள் தமது பணியிலிருந்து விலகிச் சென்றதாகக் கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வள அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே குறித்து விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.