காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பம்..

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை செயற்பட இடமளிப்பது தொடர்பான வர்த்தகமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த செவ்வாய்கிழமை கைச்சாத்திட்டார்.

எனவே இன்று(15) முதல் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் தனது வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளது.

காணாமல் போனவர்களது பெற்றோர் மற்றும் உறவினர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், ஜனாதிபதி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.