சினிமாவை தாண்டி நல்ல நண்பர்களாக இருப்பவர்கள் விஜய், விக்ரம். தற்போது விக்ரம் நடித்திருக்கும் ஸ்கெட்ச் படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
ஆனால் அதே நாளில் விஜய்யின் நடிப்பில் மாபெரும் செலவில் தயாராகும் மெர்சல் படமும் வெளியாக இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.
ஒரே நாளில் பெரிய நடிகர்களின் படங்கள் போட்டிபோட்டால் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்து ஸ்கெட்ச் படக்குழு தங்களது பட ரிலீஸ் திகதியை மாற்றியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர்.