ஓய்வு பெற்ற மின்சார சபை ஊழியர்களை பணிக்குத் திரும்புமாறு அழைப்பு..

2014ம் ஆண்டு செப்டம்பர் முதலாம் திகதிக்கு பின்னர், ஓய்வு பெற்ற மின்சார சபை ஊழியர்களை பணிக்குத் திரும்புமாறு, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சில கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை மின்சார சபை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளநிலையிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.