இலண்டன் சுரங்க ரயில் குண்டு வெடிப்புக்கு அமெரிக்க அதிபர் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குறித்த இந்த குண்டு வெடிப்பில் 29 பேர் காயம் அடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், இலண்டன் சுரங்க ரயில் வெடி விபத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிடுகையில், தோல்வி அடைந்த தீவிரவாதிகள் மற்றொரு தாக்குதலை இலண்டனில் நிகழ்த்தியுள்ளனர். அவர்களை மிகவும் கடுமையான முறையில் கையாள வேண்டும். இணையதளம்தான் இவர்களின் முக்கிய ஆட்சேர்ப்பு கருவியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
(rizmira)