நாட்டின் தென்மேற்கு பகுதிகளிலும் வடமேல் மாகாணத்திலும் இன்று(16) மற்றும் நாளை(17) மழை வீழ்ச்சியில் அதிகரிப்பு ஏற்படலாம் என காலநிலை அவதான நிலையம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
நாட்டை ஊடறுத்தும் மற்றும் நாட்டைச் சூழவுள்ள கடற் பிராந்தியங்களில் வீசும் காற்றின் வேகம் இன்று(16) முதல் அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடையிடையே கன மழை பெய்யலாம் என்றும் காலநிலை அவதான நிலையம் மேலும் எதிர்வு கூறியுள்ளது.
(rizmira)