அரசினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டால், எந்தச் சந்தர்ப்பத்திலும், மின்சார விநியோகப் பணிகளை தடையின்றி வழங்கும் பணிகளில் ஈடுபட இராணுவம் தயார் நிலையில் உள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளரான மேஜர் ஜெனரல் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் 89 படைப்பிரிவுகள் இதற்காக தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்வலுத்துறை பணியாளர்கள் கடந்த 13 ஆம் திகதி ஆரம்பித்த சேவை புறக்கணிப்பு இன்று(16) நான்காவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.
இதன் காரணமாக மட்டக்களப்பு, அம்பாறை, காலி, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் மின்விநியோகத்தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியில்துறை பிரிவு அதிகாரிகள் இல்லாத காரணத்தால், விநியோக பணிகளை வழமைக்கு கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
(rizmira)