“ஊக்கமுள்ள பிரஜைகள்” எனும் தொனிப்பொருளில் ஜேவிபி இனது மாநாடு..

மக்கள் விடுதலை முன்னணியின் தலமையில் “ஊக்கமுள்ள பிரஜைகள்” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாடு, நுவரெலியா நகரில் நாளை(17) காலை 10 மணியளவில் இடம்பெறவுள்ளது.

குறித்த இந்த மாநாட்டில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க, முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன், இலங்கை ஆசிரியர் சேவை சங்க நுவரெலியா மாவட்ட செயலாளரும் முன்னணியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளருமான மஞ்சுள சுரவீர உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளதாக, அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்க நிதி காரியதர்சி கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார்.

 

(rizmira)