ஆங் சான் சூகிக்கு கடைசி வாய்ப்பு..

வன்முறை மற்றும் ராணுவ தாக்குதல் காரணமாக மியான்மரில் இருந்து பல இலட்சம் ரோஹிஞ்சா முஸ்லீம்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். இந்நடவடிக்கையை தடுத்து நிறுத்த அந்நாட்டின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு தற்போது கடைசி வாய்ப்பு உள்ளதாக ஐ.நா. பொது செயலாளர் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மியான்மரில் நடைபெற்று வரும் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் தாக்குதல்கள் இன அழிப்புக்கு வழிவகுக்கும் என்று ஐ.நா. அமைப்பு எச்சரிக்கை விடுத்தது.

”தனது நிலையை ஆங் சான் சூச்சி தற்போது மாற்றாவிட்டால், மியான்மரில் ஏற்பட்ட சோகம் முற்றிலும் பயங்கரமான ஒன்றாக மாறிவிடும். மேலும், இந்நிலை எதிர்காலத்தில் மாறும் வாய்ப்பு இருப்பதாக நான் கருதவில்லை” என்று ஐ.நா. பொது செயலாளரான அன்டோனியோ கட்டெரஸ் கூறியுள்ளார்.

தங்கள் நாட்டுக்கு ரோஹிஞ்சாக்கள் மீண்டும் திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.