எதிர்வரும் 21ம் திகதி நாடு தழுவிய ரீதியாக வேலை நிறுத்தப் போராட்டம்.. – GMOA..

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பினை வெளியிட்டு அரச வைத்தியர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மீளவும் நாடு தழுவிய ரீதியாக வேலை நிறுத்தத்திற்கு தயராகி வருகின்றதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய சைட்டம் குறித்த பிரச்சினையில் அரசாங்கம் மௌனிப்பதும் அதற்கான எவ்வித தீர்வினை பெற்றுத்தர பின்வாங்குவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 21ம் திகதி நாடு தழுவிய ரீதியாக வேலை நிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழுவின் உறுப்பினர் சமந்த ஆனந்த தெரிவித்திருந்தார்.

 

(rizmira)