இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக அப்பாசி உறுதி..

ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த அமர்வில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காகான் அப்பாசியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, பிராந்தியம் தொடர்பான பிரச்சினைகள் பற்றியும், இரு நாட்டு உறவுகள் பற்றியும் அர்த்தபூர்வ பேச்சுவார்த்தைகள் இக்குறித்த சந்திப்பின்போது இடம்பெற்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)