லலித் – அனுஷா ஆகியோருக்கு பிணையில் செல்ல அனுமதி..

லலித் வீரதுங்க மற்றும் அனுஷா பெல்பிட்ட ஆகியோருக்கு இன்று(20) கொழும்பு உயர் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

சில் ஆடை விநியோகத்தில் இடம்பெற்ற மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டைனை விதிக்கப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பு மேல்நீதிமன்றில் பிணை கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணைகள் இன்று இடம்பெற்றபோது, அவர்கள் பிணையில் செல்ல கொழும்பு மேல்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 

(rizmira)