குழந்தைகளுக்கு முட்டை, சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இந்த இரண்டையும் வைத்து ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முட்டை – 2
வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
மொசரல்லா சீஸ் (Mozzarella cheese) – 2 டேபிள்ஸ்பூன்
குடை மிளகாய் (சிவப்பு, மஞ்சள், பச்சை) – தலா 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் – சிறியது 1
கொத்தமல்லி இலை – 2 டேபிள்ஸ்பூன்
பொடித்த மிளகு, உப்பு – தேவையான அளவு
செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சீஸை துருவிக்கொள்ளவும்.
ஒரு பவுலில் முட்டையை உடைத்து ஊற்றி அத்துடன் நறுக்கி குடைமிளகாய், வெங்காயம், கொத்தமல்லி இலை, உப்பு, பொடித்த மிளகு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் வெண்ணெய் போட்டு உருகி வரும் பொழுது முட்டை கலவையை ஊற்றி சிறிது மூடவும். அடுப்பை அளவோடு வைக்கவும். பின்பு திறந்து பிரட்டி விடவும்.
முட்டை வெந்தவுடன் மேலே சீஸ் தூவி சிறிது நேரம் மூடி வைக்கவும்.
சீஸ் உருகியதும் மேலே நறுக்கிய வெங்காயத்தை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
சுவையான சத்தான சீஸ் ஆம்லெட் ரெடி…