கடந்த 2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளிவந்து வரவேற்பைப் பெற்ற திரைப்படம் சாமி. அதன் இரண்டாம் பாகத்தை ஹரி இயக்க முடிவு செய்தார்.
விக்ரம் தற்போது நடித்து வரும் துருவநட்சத்திரம், ஸ்கெட்ச் படத்தின் வேலைகள் பெரும்பகுதி முடிவடைந்து விட்டது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ‘துருவநட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களாக ஜார்ஜியாவில் நடந்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு விக்ரம் இம்மாதம் 24-ம் திகதி சென்னை திரும்புகிறார்.
சென்னை திரும்பியதும் சாமி 2 படத்தில் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில் சாமி 2 படத்தின் நடிகர் நடிகைகள், தொழில்நுட்பவியலாளர் உள்ளிட்டோரை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.
விக்ரம் ஜோடியாக த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். மேலும், பிரபு, சூரி, பாபிசிம்ஹா, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, பிரியன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.