ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சி – சட்டத்தரணிகள் சங்கம் இடையில் விசேட சந்திப்பு..

ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சி பாராளமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் சட்டத்தரணிகள் சங்கத்திற்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று(19) இடம்பெற்றுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவது தொடர்பில் குறித்த சந்திப்பில் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்தரணிகள் சங்கத்தினரிடம் விளக்கியுள்ளனர்.

குறித்த இச்சந்திப்பில் கூட்டு எதிர்க்கட்சி சார்பில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாரச்சி, ஸீ.பீ.ரத்நாயக்க மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)