மத்திய அதிவேக வீதியின் விலைமனு கோரல் செயற்பாடுகள் குறித்து விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு கணக்காய்வாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த வீதியின் பகுதியொன்றை நிர்மாணிப்பதற்கான விலைமனு கோரலில், அதற்காக விண்ணப்பித்திருந்த நிறுவனங்கள் மற்றும் அதனை பெற்றுக் கொடுக்கும் போது முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதேவேளை, தெற்கு அதிவேக வீதியின் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான பகுதி நிர்மாணிக்கப்பட்டமை தொடர்பான கணக்காய்வு அறிக்கை கோப் குழுவிடம் சமப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த விடயம் தொடர்பான விசாரணைகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உளளிட்ட அதிகாரிகள் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)