மின்சார சபை ஊழியர்களது வேலை நிறுத்தப் போராட்டம் நிறைவுக்கு..

மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த வேலை நிறுத்தப் போராட்டமானது நேற்று(20) இரவுடன் நிறைவு பெற்றதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.

தமது கோரிக்கைகள் அடங்கிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டமையை அடுத்தே, குறித்த போராட்டம் கைவிடப்பட்டதாக குறித்த கூட்டணியின் இணைப்பாளர் ரஞ்ஜன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

சம்பளம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து கடந்த 8 நாட்களாக மின்சார சபை சேவையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.