இன்று(21) அதிகாலை கொழும்பு, புறக்கோட்டை குமார வீதி பிரதேசத்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அருகில் இருந்த வர்த்தக நிலையங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், தீப்பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என்பதுடன், இச்சம்பவத்தில் உயிர்ச்சேதங்கள் எதுவும் இல்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.