மாகாண சபைகளுக்கான தேர்தல் மார்ச் மாதத்தில்.. – பிரதமர்..

உள்ளூராட்சி மற்றும் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நடத்தி முடிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் மூன்று மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய பணிகளை நான்கு மாதத்திற்குள் முடித்துக் கொள்ள முடியும். மேலும் முடியுமாயின் மூன்று மாகண சபைகளுடன் மேலும் மாகாண சபைகளையும் இணைத்து தேர்தலை நடத்தவும் வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(20) மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்ட மூலத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

(rizmira)