அர்ஜுன மகேந்திரனிடம் நாளை(22) சட்டமா அதிபர் தரப்பினரால் குறுக்கு விசாரணை..

மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­தி­ர­னிடம் நாளை(22) சட்டமா அதிபர் தரப்­பி­னரால் குறுக்கு விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­வுள்­ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதில் சொலி­சிட்டர் ஜெனரல்  ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி தப்­புல டி லிவே­ராவின் கோரிக்­கைக்கு அமை­வாக ஆணைக்குழு குறித்த இந்த குறுக்கு விசாரணைகளை நடத்த சம்­ம­தித்­த­துடன் அது வரை ஆணைக்குழு நடவடிக்கை­க­ளையும் ஒத்திவைத்­துள்ளது.

பிணைமுறி மோசடி தொடர்­பி­லான ஜனா­தி­பதி ஆணைக்குழுவில் நேற்று(20) இரண்­டா­வது நாளா­கவும்  மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்­திரன் சாட்­சி­ய­ம­ளித்தார்.

குறித்த இச்சாட்­சியத்தின் போது,  பிணைமுறி ஏலம் தொடர்பில் அர்ஜுன அலோ­சி­ய­ஸுக்கு தான் எந்த வகை­யிலும் உதவி செய்­ய­வில்லை எனவும், மத்திய வங்­கியின் எந்த ஒரு அதி­கா­ரி­யையும் தான் அவ்­வாறு உதவி செய்ய வற்­பு­றுத்­த­வில்லை எனவும் அர்­ஜுன மகேந்­திரன் சாட்­சி­ய­ம­ளித்திருந்தார்.

 

(rizmira)