அரச வைத்தியர்களது வேலை நிறுத்தத்தினால் நோயாளர்கள் அவதி..

மாலபே, சைட்டம் நிறுவனத்தை மூடுதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

இதனால் நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, தமது வைத்தியசாலையின் வௌிநோயாளர் பிரிவின் நடவடிக்கைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சமன் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஹட்டன் கிராமிய வைத்தியசாலையிலும் பல நோயாளர்கள் இதனால் சிரமத்திற்குள்ளாகியுள்ளதோடு, நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள பல்வேறு வைத்தியசாலைகளின் நடவடிக்கைகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

 

(rizmira)