மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் இன்று(22) பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் குறுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
மேலும், பிணைமுறி தொடர்பான குறிப்பிட்ட காலத்தில் அவர் உபயோகித்த இரண்டு கையடக்கத் தொலைபேசிகளின் தகவல்கள் இல்லாத 11 மாத காலம் சம்பந்தமான ஆவணங்களை இன்று(22) 12 மணிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் ஆணைக்குழு அர்ஜுன மகேந்திரனிடம் கோரியுள்ளது.
இதேவேளை, முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூர் பிரஜையென்றும் அவர் இலங்கையில் பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கவோ ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கோ சட்டத்தில் இடமில்லையென அவருடைய சட்டத்தரணி மேற்படி ஆணைக்குழுவுக்கு தெரிவித்திருந்த போதிலும், அவர் வெளிநாட்டில் வாழ்ந்தவர் என்றாலும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அவர் பதவியைப் பொறுப்பேற்றதன் பின்னர் அவர் இந்நாட்டு சட்டத்திற்கு உட்பட்ட நபரென மேற்படி ஆணைக்குழு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.