இலங்கையில் நேற்றுமுன்தினம்(20) சில மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்த Dialog சேவை வாடிக்கையாளர்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியிருந்தது.
இதனைக் கருத்திற் கொண்ட Dialog நிறுவனம், 20ம் திகதிக்கான நாளுக்கான உள்நாட்டு, சர்வதேச மற்றும் குறுந்தகவல் (local, IDD, roaming, SMS) சேவைக்கான கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் அறவிடாதிருக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி அந்நாளுக்கு அறவிடப்பட்ட கட்டணங்கள் அடுத்த மாத கொடுப்பனவு பட்டியலில் மீள வழங்கப்படும் எனவும், ரீலோர்ட் வாடிக்கையாளர்களுக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவுக்கு வரும் எனவும் குறித்த அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
(riz_mira)