பதவிக் காலம் பூர்த்தியாகும் மாகாண சபைகளின் அதிகாரம் ஆளுநர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
எதிர்வரும் மாதங்களில் பதவிக் காலம் பூர்த்தியாக உள்ள மாகாண சபைகளின் பதவிக் காலத்தை நீடிக்க உத்தேசமில்லை என உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் உத்தியோகபூர்வ பதவிக் காலம் விரைவில் பூர்த்தியாக உள்ளது.
இந்த மாகாண சபைகளின் ஆட்சி அதிகாரம் ஆளுநர்களிடம் ஒப்படைக்கப்படும் என அமைச்சு அறிவித்துள்ளது.
சப்ரகமுவ மாகாண சபையின் பதவிக் காலம் எதிர்வரும் 27ஆம் திகதியும், வடமத்திய மாகாண சபையின் பதவிக்காலம் 30ஆம் திகதியும் பூர்த்தியாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)