யோஷிதவின் பாட்டிக்கு FCID இல் வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவு..

பொலிஸ் நிதி குற்றத் தடுப்பு பிரிவில் வாக்கு மூலம் ஒன்றை வழங்குமாறு, யோஷித ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி பொரஸ்ட்டிற்கு கொழும்பு பிரதான நீதவான் இன்று(22) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

50 மில்லியன் ரூபாவிற்கு தெஹிவளையில் காணியுடனான வீடு ஒன்றினை யோஷித ராஜபக்ஷ அவரது பாட்டியின் பெயரில் பெற்றுக் கொள்ளப்பட்டமைக்கான பணம் எவ்வாறு என்பது தொடர்பில் காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது குறித்து மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருதவாக காவற்துறை நிதி குற்றத் தடுப்பு பிரிவில் நீதிமன்றில் இன்று(22) தெரிவித்துள்ளது.

 

(rizmira)