ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூடு – கைது செய்யப்பட்டிருந்தோருக்கு பிணை..

ரத்துபஸ்வலவில் சுத்தமான குடிநீர் கேட்டு, மக்கள் நடத்திய போராட்டத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த இராணுவ சார்ஜன்ட் மற்றும் கோப்ரல் ஆகிய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தலா, 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலுமே அவ்விருவரும் கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி ஜயந்த பெர்ணான்டோவினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ சார்ஜன்ட் டிங்கிரி அருணகே சிறிசேன மற்றும் கோப்ரல் ஜயசுந்தர திலகரத்ன ஆகிய இருவருமே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

(rizmira)